மெல்பேர்ன்: அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில், மாற்றுப் பாலின உரிமைச் செயற்பாட்டாளர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.
கறுப்பு உடைகள் மற்றும் முகமூடிகளை அணிந்து வீதிகளில் இறங்கிய போராட்டக்காரர்கள், பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டிருந்த பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். மேலும், இந்த நிகழ்வைச் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்களையும் இலக்கு வைத்து அவர்கள் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
