கொழும்பு: மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (17) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்திலும் சிறிதளவு மழை எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய மலைகளின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.