கொழும்பு: கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோரும் நீதிமன்ற வளாகத்திற்கு சற்று முன்னர் வருகை தந்துள்ளனர்.
ஏற்கனவே, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே குழுமியுள்ள நிலையில், மேலும் இரு முக்கிய அரசியல் தலைவர்கள் அங்கு வருகை தந்திருப்பது, அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.