கொழும்பு: விளக்கமறியல் இன்றுடன் (26) முடிவடையும் நிலையில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கிற்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோதிலும், அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உடல்நலக் குறைபாடு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.