கொழும்பு: விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சற்று முன்னர் வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 22ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர், உடல்நலக் குறைபாடு காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் இன்று வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.