கொழும்பு: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான, வணக்கத்திற்குரிய அத்துரலியே ரத்ன தேரரைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (18) பிடியாணை பிறப்பித்துள்ளது.
பொலிஸாரால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணம் ஒன்றை அடுத்தே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வூட்லர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், எந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தப் பிடியாணை கோரப்பட்டது என்பது தொடர்பான மேலதிக விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.