வொஷிங்டன்: உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் வெள்ளை மாளிகையில் நேற்று (19) நடத்திய சந்திப்பைத் தொடர்ந்து, “ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வரப்போகிறது” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கூட்டுச் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய அவர், “ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும் சரி, ஜனாதிபதி புடினும் சரி, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார்கள். முழு உலகமும் போரினால் சோர்ந்துவிட்டது. நாங்கள் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம்” என்றார்.
அண்மையில் ரஷ்ய அதிபர் புடினுடனும், நேற்று ஜெலென்ஸ்கியுடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த ட்ரம்ப், “இது எளிதான போர் அல்ல, கடினமானது. இருப்பினும், நாங்கள் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்பதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்” எனவும் குறிப்பிட்டார்.