Headlines

வாலனா ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக ASP ரொஹான் ஒலுகல நியமனம்

(கொழும்பு) – வாலனா ஊழல் தடுப்புப் பிரிவின் (Walana Anti-Corruption Unit) பணிப்பாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ரொஹான் ஒலுகல நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தின் கீழ் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளராகக் கடமையாற்றி வரும் இவரே, வாலனா பிரிவின் புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார்.

கெஹெல்பத்தற பத்மே (Kehelbaddara Padme), கொம்பண்டோ சலிந்த (Commando Salintha) மற்றும் இஷார செவ்வந்தி (Ishara Sewwandi) போன்ற வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை இலங்கைக்கு நாடு கடத்தி அழைத்து வரும் அண்மைய நடவடிக்கைகளில் இவர் நேரடியாகப் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *