அம்பலாந்தோட்டை – கதிர்காமம் வீதியில், வீரவில பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது நால்வர் உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான இரு பேருந்துகள் மோதிய இந்த விபத்தில் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற பேருந்தும், திஸ்ஸவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த மற்றுமொரு இ.போ.ச பேருந்தும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
