கொழும்பு: வெல்லம்பிட்டிய, கித்தம்பஹுவ பகுதியில் உள்ள விடுதி ஒன்றில், இன்று (25) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
விடுதியில் தங்கியிருந்த இருவரைக் இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், எவருக்கும் உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள், கைத்துப்பாக்கி ஒன்றைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
