நாளை (02) முதல் வைத்தியர்களால் முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கையில் தமது சங்கத்தின் உறுப்பினர்கள் எவரும் ஈடுபடமாட்டார்கள் என மருத்துவ நிபுணர்கள் சங்கம் (AMS) தெரிவித்துள்ளது.
சங்கத்தின் உறுப்பினர்கள் நாளை வழமை போன்று தமது கடமைகளில் ஈடுபடுவார்கள் என அதன் பேச்சாளர் வைத்தியர் அஷோக குணரத்ன தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் சாதகமாக பதிலளிக்கத் தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கையைத் தீவிரப்படுத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்திருந்தது.
நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் விசேட மருத்துவ நிபுணர்களும் நாளை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர், வைத்தியர் பிரபாத் சுகததாச குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் தமது சங்கத்தின் உறுப்பினர்கள் எவரும் இணையமாட்டார்கள் என மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் (AMS) ஊடகப் பேச்சாளர் வைத்தியர் அஷோக குணரத்ன தெரிவித்துள்ளார்.
