வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ அடக்குமுறைகளைக் கண்டித்து இன்று (18) முழு அடைப்புப் போராட்டம் (ஹர்த்தால்) முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பல பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு, போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ள போதிலும், கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தை மற்றும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும், போக்குவரத்து மற்றும் வங்கிச் சேவைகள் அனைத்தும் வழமைபோல் இயங்கி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.