ஹர்த்தால் அழைப்புக்கு மத்தியில் வழமைபோல் இயங்கும் யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம்: வடக்கு, கிழக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்தைக் கண்டித்து, இலங்கைத் தமிழரசுக் கட்சியால் இன்று (18) அழைப்பு விடுக்கப்பட்டிருந்த ஹர்த்தால் (கடையடைப்பு), யாழ்ப்பாண மாவட்டத்தில் கலவையான பதிலைப் பெற்றுள்ளது. சில பகுதிகள் பகுதியளவில் முடங்கியிருந்தாலும், பெரும்பாலான பகுதிகள் வழமைபோலவே இயங்கின.

குறிப்பாக, சாவகச்சேரி நகரில் மரக்கறிச் சந்தை முற்றாக மூடப்பட்டிருந்தது. எனினும், பருத்தித்துறை, மந்திகை போன்ற நகரங்களில் சுமார் 90 சதவீதமான வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தன.

யாழ்ப்பாணம் முழுவதும் அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளும் வழமைபோலவே இயங்கியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அதிகரித்த இராணுவ பிரசன்னம் மற்றும் குற்றச் செயல்களுக்கு எதிராகவே இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *