தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB), ஹோமாகம மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் (வலயம் 01) இன்று (06) 12 மணிநேர நீர் வெட்டு ஒன்றை அறிவித்துள்ளது.
சபை வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், பாதுக்க மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் தற்போது நடைமுறையிலுள்ள நீர் வழங்கல் இடைநிறுத்தம் இன்று காலை 8:00 மணிக்கு நிறைவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஹோமாகம மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 12 மணிநேர நீர் வெட்டு விதிக்கப்படும்.
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் வழங்கலில் கட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக NWSDB தெரிவித்துள்ளது.
