திருவனந்தபுரம்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ திரைப்படம் இன்று (14) உலகம் முழுவதும் 5000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களின் ஆரவாரமான கொண்டாட்டங்களுக்கு மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளதால், படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
குறிப்பாக கேரளாவில் ‘கூலி’ படத்திற்கு பிரமாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது. பாலக்காடு போன்ற பகுதிகளில் ரசிகர்கள் செண்டை மேளங்களுடன் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். கேரளாவில் மட்டும் இப்படத்தின் முன்பதிவு சுமார் ₹4.11 கோடியை வசூலித்துள்ளது. மலையாள நடிகர் செளபின் சாகிர் படத்தில் இடம்பெற்றிருப்பது இந்த வரவேற்புக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
முதல் நாள் வசூல், ‘லியோ’ படத்தின் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக ஆய்வாளர்களின் கணிப்புப்படி, ‘கூலி’ திரைப்படம் மொத்தமாக ₹1000 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனை படைக்க வாய்ப்புள்ளது.