Headlines

🚨 வரலாற்றில் முதன்முறை! எண்ணெய் தீர்ந்ததால் ‘லாக்டவுன்’ அறிவித்த முதல் நாடு! உறைந்து போன உலகம்!அடுத்தடுத்து 15 நாடுகள் ரெடி!

💥 அதிர்ச்சிச் செய்தி: கொரோனா லாக்டவுனை விட கொடூரமான ஒரு லாக்டவுன் உலகை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. அதுதான் ‘எனர்ஜி லாக்டவுன்’ (Energy Lockdown). வாஷிங்டனில் அமர்ந்து கொண்டு அமெரிக்க அரசு தீட்டி வரும் போர் வெறித் திட்டங்களால், இன்று ஆசியாவின் கடைக்கோடியில் இருக்கும் ஏழை நாடுகள் இருளில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.

ஈரான் மீதான போரைத் தூண்டிவிட்டு, உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலியை (Supply Chain) அறுத்தெறிந்த அமெரிக்காவின் கொள்கைகளால், இன்று ஃபிலிப்பைன்ஸ் நாடு உலகில் முதல் நாடாக தேசிய எரிசக்தி அவசர நிலையை (National Energy Emergency) அறிவித்துள்ளது. அந்நாட்டு அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட இந்த அதிரடி உத்தரவு, உலக நாடுகளை உலுக்கியுள்ளது.

அமெரிக்காவின் போரால் அழியும் ஏழை நாடுகள்:

உலகம் முழுவதும் வளைகுடா பகுதியிலிருந்து வரும் கச்சா எண்ணெயை நம்பித்தான் இயங்குகிறது. ஆனால், தனது வல்லாதிக்கத்தை நிலைநிறுத்த அமெரிக்கா அங்கே போரை மூட்டியுள்ளது. இதன் நேரடி விளைவாக, ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் கச்சா எண்ணெய் விநியோகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டு அதிபர் வேறு வழியின்றி அவசர நிலையை அறிவித்து, எரிசக்தி விநியோகத்தை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார்.

பொருளாதார நடவடிக்கைகள் முடங்காமல் இருக்கவும், அத்தியாவசிய சேவைகள் சீராக கிடைக்க செய்யவும் இந்த Emergency நடவடிக்கைகள் தேவை என்று அதிபர் மார்கோஸ் கதறியுள்ளார். ஆனால், இந்த நெருக்கடியை உருவாக்கிய அமெரிக்காவோ, இதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் தனது ஆயுத வியாபாரத்தைப் பெருக்கி வருகிறது.

📈 டீசல், பெட்ரோல் விலை இரட்டிப்பு – ஃபிலிப்பைன்ஸின் மரண பயம்:

ஃபிலிப்பைன்ஸ் தனது கச்சா எண்ணெய் தேவையில் 98 சதவீதத்தை வளைகுடா பகுதியிலிருந்துதான் இறக்குமதி செய்கிறது. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்கா-ஈரான் பதற்றம் காரணமாக, இந்நாட்டில் டீசல் மற்றும் பெட்ரோல் விலை இரண்டு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. சாதாரண மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

மார்ச் 20 வெளியான அதிர்ச்சித் தகவலின் படி, இந்நாட்டில் வெறும் 45 நாட்கள் மட்டுமே எண்ணெய் இருப்பு உள்ளது. இந்தப் பற்றாக்குறை தொடர்ந்தால் பொருளாதாரம் முழுமையாக முடங்கி, பட்டினிச் சாவு ஏற்படும் என்ற அச்சம் நாடு முழுவதும் பரவியுள்ளது. இது வெறும் ஃபிலிப்பைன்ஸின் பிரச்சனை அல்ல; அமெரிக்காவின் தவறான வெளியுறவுக் கொள்கைகளால் ஆசியக் கண்டம் முழுவதும் எதிர்கொள்ளும் பெரிய எரிசக்தி நெருக்கடி இதுவாகும்.

🚕 மானியமும் இல்லை, விலையும் குறையாது – அரசின் கையறு நிலை:

அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட இந்த செயற்கையான கச்சா எண்ணெய் விலை உயர்வை, ஃபிலிப்பைன்ஸ் அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. கச்சா எண்ணெய் விலையை நிர்ணயம் செய்வதில் தங்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்பதால், பெட்ரோல், டீசல் விலையை உறைக்கச் செய்ய மானியம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இதற்கு மாறாக, அண்டை நாடுகளான இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து போன்றவை பரந்த அளவில் எரிபொருள் மானியம் வழங்கி வருகின்றன. ஆனால், ஃபிலிப்பைன்ஸ் பொருளாதாரச் சூழல் அதற்கு இடம் கொடுக்கவில்லை. அரசாங்கம் மானியம் வழங்குவதற்குப் பதிலாக, மோட்டார் சைக்கிள் டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் பொது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 5,000 பெசோ (சுமார் 83 அமெரிக்க டாலர்) உதவித் தொகை வழங்க முடிவு செய்துள்ளது. இது கடலில் கரைத்த பெருங்காயம் போன்றது.

🌿 மீண்டும் நிலக்கரிக்கு மாறும் அவலம் – சுற்றுச்சூழல் பாதிப்பு:

அமெரிக்காவின் போரால் எல்என்ஜி (LNG) விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், ஃபிலிப்பைன்ஸ் நாடு தற்காலிகமாக நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களை அதிக அளவில் நம்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்று உலக நாடுகளுக்குப் பாடம் எடுக்கும் அமெரிக்கா, தனது போர் வெறியால் ஏழை நாடுகளை மீண்டும் நிலக்கரிப் பயன்பாட்டிற்குத் தள்ளியுள்ளது. அதே நேரத்தில், எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க சீனா மற்றும் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஃபிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மீறி, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஏழை நாடுகள் தள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவின் நிலைமையும் கவலைக்கிடம்:

ஃபிலிப்பைன்ஸ் போன்ற இறக்குமதியை முழுமையாக நம்பியுள்ள நாடுகள் மாத்திரமன்றி, இந்தியாவும் இந்த எரிசக்தி நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் கொள்கைகளால் தூண்டப்பட்ட இந்தப் போரின் நெருப்பு, இப்போது இந்தியாவின் வீட்டு வாசலையும் எட்டியுள்ளது. குஜராத் மற்றும் ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்களில் மக்கள் மாபெரும் வரிசைகளில் நிற்பதைக் காண முடிகிறது. எரிவாயு தட்டுப்பாட்டு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கடைகள் மற்றும் சிறிய தொழில்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.

🌐 இந்தியா உட்பட 15 நாடுகள் கதறல் – அடுத்து என்ன?

ஃபிலிப்பைன்ஸ் தாண்டி அமெரிக்காவின் போர் கொள்கைகளால் இலங்கை, இந்தியா, மியான்மர், பூட்டான், ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, தென் ஆப்பிரிக்கா, கென்யா, பாகிஸ்தான், லாவோஸ், வியட்நாம், நியூசிலாந்து, பங்களாதேஷ், எகிப்து, கம்போடியா ஆகிய 15 நாடுகள் எரிபொருள் சார்ந்த பயன்பாட்டுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

தற்போது நிலைமை மோசமாகும் பட்சத்தில், இது முழுமையான ‘எனர்ஜி லாக்டவுன்’ ஆகவும் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் போர் வெறித் தீ, உலக நாடுகள் அனைத்தையும் பொசுக்கி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *