1 மாதங்களுக்குப் பிறகு பணவீக்கம்1.2% அதிகரிப்பு

கொழும்பு: கடந்த 11 மாதங்களாக வீழ்ச்சியைப் பதிவுசெய்து வந்த கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான வருடாந்தப் பணவீக்கம், இந்த ஓகஸ்ட் மாதத்தில் மீண்டும் நேர்மறைக்குத் திரும்பி, 1.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் நேற்று (29) அறிவித்துள்ளது.

இதன்படி, உணவுப் பணவீக்கம் ஜூலையில் 1.5% ஆக இருந்த நிலையில், ஓகஸ்டில் 2% ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், உணவு அல்லாத பணவீக்கம் ஜூலையில் -1.2% ஆக இருந்த நிலையில், ஓகஸ்டில் 0.8% ஆக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டின் இறுதி வரை பணவீக்கம் 2 சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்படும் எனவும், 2026ஆம் ஆண்டின் பிற்பகுதியிலேயே மத்திய வங்கியின் 5% என்ற இலக்கை அது அடையும் எனவும் First Capital ஆய்வு நிறுவனத்தின் தலைவர் திமந்த மெத்யூ கணித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணவீக்கம் கணிசமாகக் குறைந்திருந்தமை, வட்டி வீதங்களைக் குறைக்க உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *