பாதாள உலகக் குழுத் தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து 10 கோடி ரூபாய்க்கும் (100 மில்லியன்) அதிகமாக லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், பொலிஸ் கலாசாரப் பிரிவின் பதில் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) சதீஷ் கமகே கைது செய்யப்பட்டுள்ளார்.புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால், பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் வைத்து அவர் இன்று (14) கைது செய்யப்பட்டார். லஞ்சப் பணம் அவரது தனிப்பட்ட மற்றும் உறவினர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
100 மில்லியன் ரூபாய் லஞ்சக் குற்றச்சாட்டு: சிரேஷ்ட பொலிஸ் (SSP) சதீஷ் கமகே கைது!
