இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) அனைத்து உறுப்பினர்களுக்குமான அவசர பொதுக்கூட்டம் நாளை (15) நடைபெறவுள்ளதாக அதன் தலைவர் ராஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கடந்த 14 ஆண்டுகளில் இவ்வாறானதொரு அவசர கூட்டம் கூட்டப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அகுரேகொட துப்பாக்கிச் சூடு எதிரொலி அகுரேகொட பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
குறித்த சம்பவத்தில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இந்தக் கொடூரமான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிப்பதற்காகவும் நாளை பிற்பகல் 3.00 மணிக்கு இந்த அவசர கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
