சென்னை: ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி நாளை (19) அறிவிக்கப்பட உள்ள நிலையில், தொடக்க வீரராக சஞ்சு சாம்சனைக் களமிறக்க வேண்டாம் என முன்னாள் அணித் தலைவர் கிரிஷ் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
“சஞ்சு சாம்சனுக்கு ஷார்ட் பால்களுக்கு எதிராக பலவீனம் உள்ளது; எதிரணிகள் அதைப் பயன்படுத்திக்கொள்ளும்” என அவர் எச்சரித்துள்ளார்.
தனது நம்பர்-1 தொடக்க வீரராக அபிஷேக் ஷர்மாவையே தொடர்ந்து பயன்படுத்துவேன் எனக் கூறியுள்ள ஸ்ரீகாந்த், மற்றொரு தொடக்க வீரராக தமிழகத்தின் சாய் சுதர்சன், 14 வயது வீரர் வைபவ் சூரியவன்ஷி அல்லது ஜெய்ஸ்வால் ஆகிய மூவரில் ஒருவரையே தேர்வு செய்வேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விக்கெட் கீப்பர் இடத்திற்கு சஞ்சு சாம்சன் அல்லது ஜித்தேஷ் சர்மாவில் ஒருவரையும், மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் பட்டேலையும் சேர்க்கலாம் எனவும் ஸ்ரீகாந்த் தனது அணித் தேர்வு குறித்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.