2025 ஆம் ஆண்டு க.பொ.த. (உயர்தர) பரீட்சைக்கு விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம் ஓகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நீட்டிப்பு, 2024 ஆம் ஆண்டு மீள் மதிப்பீட்டு பெறுபேறுகளின் அடிப்படையில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கும், இதுவரை எந்தவொரு காரணத்தால் விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் இணையவழியில் மட்டுமே ஏற்கப்படுவதாகவும், இந்த நேரத்தைத் தொடர்ந்து மேலும் கால அவகாசம் வழங்கப்படமாட்டாது எனவும் கல்வி அமைச்சு தனிக்குறிப்பாக தெரிவித்துள்ளது.
2025 உயர்தர பரீட்சை விண்ணப்ப அவகாசம் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
