2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17) செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறது.
நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 3,545 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை மொத்தம் 4,51,463 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
இப்பரீட்சைகள் இன்று (17) முதல் எதிர்வரும் 2026 பெப்ரவரி 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
பரீட்சார்த்திகள் பரீட்சை ஆரம்பமாவதற்கு குறைந்தது ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாகவே தத்தமது பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவுறுத்தியுள்ளார்.
