Headlines

2026 டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு: தசுன் ஷானக்க தலைமை

இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் (squad) அறிவிக்கப்பட்டுள்ளது.

தசுன் ஷானக்க தலைமையிலான இந்தக் குழாமில், குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோரை உள்ளடக்கிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் வரிசை இடம்பெற்றுள்ளது.

இலங்கை அணி தனது உலகக் கோப்பை பயணத்தை பெப்ரவரி 8 ஆம் திகதி அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளது.

இலங்கை குழாம்: தசுன் ஷானக்க (அணித்தலைவர்), பதும் நிஸங்க, குசல் மெண்டிஸ், கமில் மிஷார, குசல் பெரேரா, ஜனித் லியனகே, சரித் அசலங்க, கமிந்து மெண்டிஸ், பவன் ரத்னநாயக்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, எஷான் மாலிங்க, துஷ்மந்த சமீர, மதீஷ பத்திரன மற்றும் மஹீஷ் தீக்ஷன.

இலங்கை அணியின் குழுநிலைப் போட்டிகள் (Group Stage Fixtures):

  • பெப்ரவரி 8: அயர்லாந்துக்கு எதிராக, கொழும்பு
  • பெப்ரவரி 12: ஓமனுக்கு எதிராக, பல்லேகல
  • பெப்ரவரி 16: அவுஸ்திரேலியாவிற்கு எதிராக, பல்லேகல
  • பெப்ரவரி 19: ஜிம்பாப்வேக்கு எதிராக, கொழும்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *