கிளிநொச்சி முகமாலையில் 31 வெடிக்காத குண்டுகள் மீட்பு!
கிளிநொச்சி: கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில், 31 வெடிக்காத குண்டுகள் நேற்று (01) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளன.
அப்பகுதியில் உள்ள வீடொன்றின் உரிமையாளர், தனது காணியில் குழி தோண்டியபோதே, புதைக்கப்பட்டிருந்த இந்தக் குண்டுகளைக் கண்டு, உடனடியாக பளை பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவின் பேரில், பாதுகாப்பான முறையில் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த யுத்த எச்சங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
