4.5% பொருளாதார வளர்ச்சி: மத்திய வங்கியின் புதிய கணிப்பு

கொழும்பு: அமெரிக்காவின் இறக்குமதித் தீர்வைகளால் சில சவால்கள் காணப்பட்டாலும், இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு 4.5% வளர்ச்சியைப் பதிவு செய்யும் என இலங்கை மத்திய வங்கி இன்று (15) வெளியிட்டுள்ள நாணயக் கொள்கை அறிக்கையில் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இது, உலக வங்கியின் 3.5% வளர்ச்சி கணிப்பை விட அதிகமாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன், கடந்த 2024ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதாரம் 5% வளர்ச்சி கண்டிருந்தது. எனினும், அமெரிக்கா விதித்துள்ள 20% தீர்வைகள், நாட்டின் இரண்டாவது பெரிய அந்நியச் செலாவணி ஈட்டும் துறையான ஆடைத் தொழிற்றுறைக்கு பெரும் சவாலாக இருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பணவீக்கம் தொடர்பில், தற்போது குறைவாகக் காணப்பட்டாலும், 2026ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அது 5% என்ற இலக்கை நோக்கி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம், மத்திய வங்கி தனது அடிப்படை வட்டி வீதத்தை 7.75% ஆக மாற்றமின்றிப் பேணியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *