கொழும்பு: நீதிமன்றத்தை தவிர்த்து வந்த, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித்த ஹல்லொலுவ, இன்று (19) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (18) இவரைக் கைது செய்யப் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
நாரஹேன்பிட்டியில் இவரது வாகனம் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் (CCD) விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணைகள் தொடர்பில் பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே, நீதிமன்றம் இந்தப் பிடியாணையைப் பிறப்பித்திருந்தது.