Headlines

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறிய 47 இந்திய மீனவர்கள் கைது: 5 படகுகளும் பறிமுதல்!

கொழும்பு: இலங்கையின் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி, அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 47 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தலைமன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்புகளில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன், அவர்கள் பயன்படுத்திய ஐந்து மீன்பிடிப் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *