Headlines

5 மணிநேர விசாரணையின் பின் ஷிராந்தி ராஜபக்ஷ FCID யிலிருந்து வெளியேறினார்

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்ததன் பின்னர், சற்று முன்னர் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறியுள்ளார்.

‘சிரிலிய’ (Siriliya) நிதியத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

முன்னதாக, கடந்த 2026 ஜனவரி 27 ஆம் திகதி வாக்குமூலம் ஒன்றைப்பதிவு செய்வதற்காக அவர் FCID முன்னிலையில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும், அன்றைய தினம் சமூகமளிக்க முடியாது எனத் தனது சட்டத்தரணி ஊடாகப் பொலிஸாருக்குத் தெரிவித்த அவர், இரண்டு வார கால அவகாசமும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *