கொழும்பு: முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இன்று (01) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாக வேண்டிய அவசியமில்லை என CID அறிவித்துள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் சர்ச்சைக்குரிய இங்கிலாந்துப் பயணம் தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் வழங்குவதற்காகவே, அவர் இன்று காலை 9 மணிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை, “ரணில் விக்ரமசிங்க வொல்வர்ஹாம்டன் பல்கலைக்கழக நிகழ்வில் உத்தியோகப்பூர்வ அழைப்பின் பேரிலேயே கலந்துகொண்டார் என்பது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,” என முன்னாள் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த பின்னணியிலேயே, சமன் ஏக்கநாயக்கவின் இன்றைய விசாரணை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.