கொழும்பு: சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கால், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (SCO) முன்மொழியப்பட்ட உலகளாவிய அபிவிருத்தி, பாதுகாப்பு, நாகரிகம் மற்றும் ஆளுகைக்கான முன்னெடுப்புகளை இலங்கை சாதகமாக நோக்குவதாக, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தனது ‘X’ சமூக வலைத்தளப் பக்கத்தில் நேற்று (01) இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், “இறையாண்மை சமத்துவம், சட்டத்தின் ஆட்சி, பல்தரப்புவாதம் மற்றும் மக்களை மையப்படுத்திய அபிவிருத்தி போன்ற கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முன்னெடுப்புகளை நான் சாதகமாகப் பார்க்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.