கிளிநொச்சி: வடக்கு தென்னை முக்கோணத் திட்டத்தின் கீழ், வட மாகாணத்தின் முதலாவது தென்னங்கன்று உற்பத்தி நிலையம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இன்று (02) பளையில் திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களை வடக்கு தென்னை முக்கோணமாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் கீழ், 2025ஆம் ஆண்டளவில் 16,000 ஏக்கர்களிலும், 2027ஆம் ஆண்டளவில் 40,000 ஏக்கர்களிலும் தென்னைப் பயிர்ச்செய்கையை விஸ்தரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னை ஆராய்ச்சி நிலையம் மற்றும் சிலாபம் பிளான்டேஷன்ஸ் நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நிலையத்தின் செயற்பாடுகளை ஆரம்பித்து வைக்கும் முகமாக, ஜனாதிபதி தென்னங்கன்று ஒன்றையும் நாட்டி வைத்தார். அமைச்சர்களான சமந்த வித்யாரத்ன, இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் வட மாகாண ஆளுநர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மேலும் பல செய்திகளுக்கு, எமது பேஸ்புக் பக்கத்தைப் பின்தொடர இங்கே கிளிக் செய்யவும்.Follow us on Facebook