பெங்களூரு: சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தைத் தொடர்ந்து, பெங்களூரு எம். சின்னசாமி மைதானம் பெரிய போட்டிகளுக்குப் பாதுகாப்பற்றது என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதனால், 2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மாற்று சொந்த மைதானத்தை (home ground) ஆர்சிபி அணி நிர்வாகம் தேடி வருகிறது.
நாக்பூர், இந்தூர் மற்றும் புனே ஆகிய மூன்று மைதானங்கள் பரிசீலனையில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்சிபி அணியின் கப்டன் ரஜத் படிதார் இந்தூரைச் சேர்ந்தவர் என்பதாலும், துணை கப்டன் ஜிதேஷ் ஷர்மா நாக்பூரைச் சேர்ந்தவர் என்பதாலும் அந்த மைதானங்கள் முன்னுரிமையில் உள்ளன.
இதேவேளை, பெங்களூருவில் 1,650 கோடி ரூபாய் செலவில் 80,000 இருக்கைகள் கொண்ட புதிய விளையாட்டு வளாகம் அமைக்க கர்நாடக முதல்வர் சித்தராமையா ஒப்புதல் அளித்துள்ளார். நாட்டின் இரண்டாவது பெரிய மைதானமாக அமையவுள்ள இது, கட்டி முடிக்கப்படும் வரை, ஆர்சிபி அணி தற்காலிகமாக வேறு மைதானங்களிலேயே விளையாட வேண்டியிருக்கும்.