காலி மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல மீன்பிடிப் படகுகளில் இன்று (10) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
காலி மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு, இலங்கை கடற்படை மற்றும் மீனவர்களின் தீவிர முயற்சியின் பலனாக, தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும், இந்தத் தீ விபத்தில் நான்கு மீன்பிடிப் படகுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.