கொழும்பு: மன்னார் காற்றாலைத் திட்டத்திற்காக அதானி குழுமத்தினால் வைப்பிலிடப்பட்ட, மீளளிக்கப்படக்கூடிய வைப்புத்தொகைகள் மாத்திரமே அரசாங்கத்தால் திருப்பிச் செலுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுந்த கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அதானி குழுமம் ஆரம்பகட்ட செலவுகளைக் கோரியுள்ளதா என வினவப்பட்டபோதே அவர் இந்த விளக்கத்தை அளித்தார். எது மீளளிக்கப்படக்கூடிய வைப்புத்தொகை என்பதைத் தீர்மானிக்குமாறு நிலையான எரிசக்தி அதிகாரசபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.