Headlines

லிட்ரோ வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிப்பு: புதிய விலைகள் விவரம்

லிட்ரோ வீட்டுப் பாவனைக்கான எல்.பி. எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இன்று (10) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 3,990 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 120 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 1,602 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.

அதேநேரம், 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 56 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 750 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் நாளை முதல் வீட்டுப் பாவனைக்கான எல்.பி. எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு அமையும்:

  • 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர்: ரூபா 3,990
  • 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர்: ரூபா 1,602
  • 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர்: ரூபா 750

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *