Headlines

இசைக்குயில் நந்தா மாலினியின் இறுதிச் சடங்குகள் இன்று பொரளை மயானத்தில்!

இலங்கை இசைத்துறையின் ஜாம்பவான், கலாநிதி நந்தா மாலினியின் இறுதிச் சடங்குகள் இன்று (22) பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளன.

அன்னாரது பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நுகேகொடை, நவாலை வீதி, விஜயபா மாவத்தையில் அமைந்துள்ள ‘நந்தா மாலினி சங்கீத ஆசிரமத்தில்’ வைக்கப்பட்டுள்ளது.

இறுதிக் கிரியைகள் மற்றும் நல்லடக்கம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்துப் பேராசிரியர் சுனில் அரியரத்ன தெரிவித்ததாவது:

“காலை 10.00 மணிக்கு மத அனுஷ்டானங்கள் (பஞ்சுகூல கிரியைகள்) நடைபெறும். அந்த நேரத்தில், சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த முடியாது. அதன் பின்னர் மாலை 3.30 மணி வரை அஞ்சலி செலுத்துவதற்கான வாய்ப்பு மீண்டும் வழங்கப்படும்.”

தொடர்ந்து பூதவுடல் அடங்கிய ஊர்வலம் மாலை 3.30 மணிக்கு நந்தா மாலினி சங்கீத ஆசிரமத்திலிருந்து புறப்பட்டு, ராஜகிரிய பாராளுமன்ற வீதி ஊடாகப் பொரளை பொது மயானத்தைச் சென்றடையும்.

“தகனக் கிரியைகள் மாலை 5.00 மணிக்கு நடைபெறும். மயானத்தில் வேறு எந்த விசேத நிகழ்வுகளும் இடம்பெறாது” என்று பேராசிரியர் அரியரத்ன மேலும் கூறினார்.

இலங்கை இசைக்குயில் நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் நவாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆகஸ்ட் 20ஆம் திகதி காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *