Headlines

அம்பாறை, மட்டக்களப்பில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம்!

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (24) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலையே நிலவும்.

இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மன்னார், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய சேதங்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *