அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பின் பல பகுதிகளில் நாளை (03) இரவு முதல் 24 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.
நாளை வியாழக்கிழமை (03) இரவு 8:00 மணி முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (04) இரவு 8:00 மணி வரை இந்த நீர் விநியோகத் தடை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நுேகொட, கொஹுவல, தெஹிவளை, கல்கிஸ்ஸை, ரத்மலானை, மொறட்டுவை, ரவத்தாவத்தை, சொய்சாபுர, அங்குலானை, இண்டிபெத்த, கட்டுபெத்த, கல்தேமுல்ல, மூத்துவால், கொரலவெல்ல, எகொட உயன மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகள் இதனால் பாதிக்கப்படவுள்ளன.
மேலும், சேத்சிறிபாய, ஹிம்புடான, உடுமுல்ல வீதி, மாளிகாகொடல்ல, பேங்க் ஜங்ஷன் வீதி, டபிள்யூ. ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லாக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, ஆஸ்பத்திரி வீதிச் சுற்றுவட்டம், ஜெயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும்.
நீர் விநியோகத்தின் தரத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்தப் பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதோடு, பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
