Headlines

ரூ. 100 இனால் குறைந்தது 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டர்: புதிய விலை 4,365 ரூபா!

லிட்ரோ சமையல் எரிவாயு (Litro domestic LP gas) சிலிண்டர்களின் விலைகள் இன்று (05) முதல் குறைக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கமைவாக, 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 4,365 ரூபாவாகும்.

மேலும், 5 கிலோ கிராம் எடையுடைய சிலிண்டரின் விலை 42 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1,750 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, 2.3 கிலோ கிராம் எடையுடைய சிறிய சிலிண்டரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 815 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் அதிகரித்து வரும் நிலையிலும், சவாலான அந்நியச் செலாவணி நிலைமைகளுக்கு மத்தியிலும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் 2026 செப்டெம்பர் மாதத்திற்கான இந்த விலைக்குறைப்புத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *