செய்தி:
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் சேவைகள் தொடர்பிலான கேள்விகள், தெளிவுபடுத்தல்கள் மற்றும் ஆலோசனைகளை பொதுமக்கள் இனி வாட்ஸ்அப் குரல் செய்திகள் (WhatsApp voice messages) மூலம் நேரடியாக அமைச்சருக்கு அனுப்ப முடியும்.
“அஸ்க் ஹந்துன்” (“Ask Handun”) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய முன்னெடுப்பின் ஊடாக, அமைச்சின் சேவைகள் தொடர்பான எந்தவொரு விடயத்தையும் 077 554 1646 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கு குரல் செய்தியாக அனுப்பி வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களினால் சமர்ப்பிக்கப்படும் கேள்விகள் அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்பட்டு, தெரிவு செய்யப்படும் கேள்விகளுக்கான பதில்கள் அமைச்சரின் உத்தியோகபூர்வ ஃபேஸ்புக் (Facebook) பக்கம் ஊடாக வெளியிடப்படும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
