Headlines

இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் ஞானசார தேரர்!

திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தினியாவல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பூஜ்ய கலபொட அத்தே ஞானசார தேரர் இன்று (04) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் இவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இவரைக் கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் திறந்த பிடியாணை பிறப்பித்திருந்தது. தேரர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் பயணத் தடையும் விதித்திருந்தது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், பூஜ்ய கலபொட அத்தே ஞானசார தேரர் நேற்று இரவு (03) களுத்துறை, தினியாவல ஆரண்ய சேனாசனயவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டதன் பின்னர், ஞானசார தேரர் நேற்று இரவு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *