Headlines

10 நாட்களில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள்: வெற்றிகரமாக நிறைவடைந்தது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி!

செப்டம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமான 2026 ஆம் ஆண்டுக்கான கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி, 10 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று நேற்று (ஒக்டோபர் 04) நிறைவடைந்தது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப (BMICH) வளாகத்தில் நடைபெற்ற இந்த வருடாந்த புத்தகக் கண்காட்சிக்கு, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் வருகை தந்திருந்தனர்.

இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் அத்துல ஜயக்கொடி இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், இந்த 10 நாள் காலப்பகுதியில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இக்கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இது மிகவும் வெற்றிகரமான ஒரு புத்தகக் கண்காட்சியாக அமைந்ததாகக் குறிப்பிட்ட அவர், ஆரம்பக்கட்ட அறிக்கைகளின்படி 95 சதவீதமான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். “இது ஒரு மிகச் சிறப்பான கண்காட்சி, 95 சதவீத புத்தக விற்பனை எட்டப்பட்டுள்ளதாக எங்களுக்கு அறிக்கைகள் கிடைத்துள்ளன” என அவர் மேலும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *