Headlines

இன்று மாலை முதல் கொட்டித் தீர்க்கவுள்ள கனமழை: 6 மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர எச்சரிக்கை.

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள வளிமண்டலக் கலப்பால் (Atmospheric disturbance) இன்று (அக்டோபர் 20) மாலை முதல் நாட்டின் பல பகுதிகளில் மழை வீழ்ச்சி கணிசமாக அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (20) மதியம் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுகின்றன.

100 மி.மீ கனமழை பெய்யக்கூடிய பகுதிகள்:

குறிப்பாக வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா ஆகிய 6 மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை கனமழை பெய்யக்கூடும் எனத் திணைக்களம் தெரிவிப்பால் எச்சரித்துள்ளது. மேலும், காலை வேளையில் வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கைகள் மற்றும் பனிமூட்டம்:

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும், மிகச் செறிவான மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடும் என்பதால், அதனால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ளப் பொதுமக்கள் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான சூழ்நிலையும் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *