2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டுக்கான மின்சார கட்டணத்தை 2.88 சதவீதத்தால் அதிகரிக்குமாறு தேசிய கட்டமைப்பு நடவடிக்கை மையம் (NSO) கோரிக்கை விடுத்துள்ளது. எனினும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இதனைக் குறைத்து 1.46 சதவீத அதிகரிப்பையே பரிந்துரைத்துள்ளது.
பொதுக் கருத்து கேட்புக் கூட்டம்: உத்தேச மின் கட்டணத் திருத்தம் குறித்த இறுதி முடிவு, நாளை நடைபெறவுள்ள பொதுக் கருத்து கேட்புக் கூட்டத்திற்குப் பின்னரே எடுக்கப்படும் என PUCSL அறிவித்துள்ளது.
- இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள் 0770399119 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
- பொதுக் கருத்து கேட்பு செயல்முறை முழுமைடைந்த பின்னரே இறுதி மின் கட்டணத் திருத்தம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
