Headlines

இந்திய நிதியுதவியில் 100 அம்புலன்ஸ்கள் – சுவசெரிய சேவைக்கான திட்டத்துக்கு ஒப்புதல்

1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவைக்காக 100 புதிய அம்புலன்ஸ்களைக் கொள்வனவு செய்வதற்கு இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

முழுமையான உபகரணங்களுடன் கூடிய இந்த 100 அம்புலன்ஸ்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதியுதவியை மானியமாக வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் விடுத்த விசேட கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் இந்தியா இந்த நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *