Headlines

அடுத்த தலைமுறைக்கு இலவச இரட்டைக் குடியுரிமை

கொழும்பு | தமிழ்முரசு

இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்போரின் வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளுக்குக் கட்டணமின்றி இரட்டைக் குடியுரிமை வழங்க இலங்கை அரசு முன்மொழிந்துள்ளது. வெளிநாடுகளில் வாழும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளுக்கும் இந்தச் சலுகையை விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, «Global Sri Lankan Heritage Citizen» என்ற புதிய திட்டத்தின் கீழ் இந்த முன்மொழிவை அறிவித்தார். வெளிநாடுகளில் வாழும் இலங்கை வம்சாவளியினரின் இரண்டாம், மூன்றாம் தலைமுறையினரை இலக்காகக் கொண்டு இத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுவாழ் இலங்கையர்களும் அவர்களது சந்ததியினரும் கொண்டுள்ள அறிவு, திறன் மற்றும் அனுபவத்தை நாட்டின் வளர்ச்சியுடன் இணைப்பதும், தாயகத்துடனான அவர்களின் உறவை வலுப்படுத்துவதும் திட்டத்தின் நோக்கம் என ஜனாதிபதி தெரிவித்தார்.

தகுதி நிபந்தனைகள், விண்ணப்ப நடைமுறை மற்றும் அமுலாக்கத் திகதி குறித்த விவரங்கள் வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிடப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *