Headlines

வடக்கு, கிழக்கில் 3,000 வீடுகள் இன்று திறப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கும், டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்தவர்களுக்கும் நிர்மாணிக்கப்பட்ட 3,000 வீடுகளைத் திறந்து வைக்கும் நடவடிக்கைகள் இன்று (23) ஆரம்பமாகின்றன.

‘எமக்கென ஓர் இடம் – அழகான வாழ்க்கை’ என்ற வீடமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று முதல் நவம்பர் 27ஆம் திகதி வரை குறித்த 3,000 வீடுகளும் கட்டம் கட்டமாகத் திறந்து வைக்கப்படவுள்ளன.

மேலும், எதிர்வரும் டிசம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் மேலும் 1,000 வீடுகளைத் திறந்து வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் போரினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே திட்டத்தின் நோக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *