Headlines

27 இலட்சம் இன்சுலின் குப்பிகளைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

இலங்கையில் நீரிழிவு நோயாளர்களின் சிகிச்சைக்குத் தேவையான 27 இலட்சம் இன்சுலின் மருந்துக் குப்பிகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சர்வதேச போட்டி விலைமனுக் கோரலின் அடிப்படையில், 42 இலட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த ஒப்பந்தம் இந்திய நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதய நோயாளர்களின் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் 9 இலட்சத்து 20 ஆயிரம் எனொக்சபரின் சோடியம் ஊசி மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

8 இலட்சத்து 28 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த ஒப்பந்தம் சீன நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உயர்மட்ட கொள்வனவுக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த ஒப்பந்தங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரு ஒப்பந்தங்களின் மொத்த பெறுமதி 51 இலட்சத்து 21 ஆயிரம் அமெரிக்க டொலராகும். இதில் மருந்துகளுக்கான செலவும் சரக்குப் போக்குவரத்துச் செலவும் உள்ளடங்குகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *