டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் உரிய உரிமமின்றி மருந்துகளைப் பதுக்கி விநியோகித்ததாகக் கூறப்படும் வழக்கில், விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
2021ஆம் ஆண்டு, ‘ஃபேபிஃப்ளூ’ (Fabiflu) மாத்திரைகளை உரிமமின்றி பதுக்கி விநியோகித்ததாக டெல்லி மருந்து கட்டுப்பாட்டு ஆணையம், கம்பீர் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை இரத்து செய்யக் கோரி கம்பீர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், “தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி நீதிமன்றத்தில் சலுகை பெற முயற்சிக்க வேண்டாம்,” எனக் கடுமையாக எச்சரித்தது.
இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், கம்பீருக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த வழக்கு, விசாரணை நீதிமன்றத்தில் செப்டம்பர் 8ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.