Headlines

சூர்யா-ஜோதிகா மகள் தியா இயக்கிய ஆவணப்படம் ஆஸ்கர் தகுதிச் சுற்றுக்குத் தேர்வு!

சென்னை: நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியரின் மகள் தியா சூர்யா இயக்கிய ‘Leading Light – The Untold Stories Of Behind The Scenes’ என்ற ஆவணப்படம், ஆஸ்கர் விருதுக்கான தகுதிச் சுற்றுத் திரையிடலுக்குத் தேர்வாகியுள்ளது. திரைப்படத் துறையில் பணிபுரியும் பெண் லைட் வுமன்கள் (light women) சந்திக்கும் சவால்கள் மற்றும் சொல்லப்படாத கதைகளைப் பற்றிப் பேசும் இந்த 13 நிமிட ஆவணப்படம், ஏற்கெனவே சர்வதேசத் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை வென்றுள்ளது. தற்போது, ஆஸ்கர் தகுதி பெறுவதற்காக, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ரீஜென்சி திரையரங்கில் இப்படம் திரையிடப்பட்டு வருகிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை, சூர்யாவின் 2டி நிறுவனம் தனது ‘X’ பக்கத்தில் பகிர்ந்து, மகள் தியாவிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளது. திரையுலகில் இந்த இளம் சாதனையாளருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *